மயிலாடுதுறை, மே 25 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வீடுகளில் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக்கும் கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார். அங்கு மண்புழு தயாரிக்கும் பணிகள் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிக்கும் கிடங்கு, நெகிழி பிரித்து எடுக்கும் இயந்திரங்களை பார்வையிட்டார். பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் பூபதி கமலகண்ணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.