தருமபுரி, அக்.14- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் பல்வேறு இடங் களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவ னங்களான பிஎஸ்என்எல், ராணுவ தள வாடா தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாகவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். வயதான வர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3 ஆயி ரம் உயரத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக் கங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட் டம், நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப் பிரச்சார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சின்னசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் மற் றும் இடதுசாரி கட்சிகளின் ஒன்றிய நிர் வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் சிபிஐ, சிபிஎம் சார்பில் மத்திய பாஜக அரசைக் கண் டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் க.அன்பு மணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி. ஒன்றிய செயலா ளர் சு.சுரேஷ், சிபிஐ மாவட்ட நிர்வா கக் குழு உறுப்பினர்கள் டி.என்.கிருஷ்ண சாமி, எல்.மாரிமுத்து, செங்கோட்டுவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதேபோல், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற இயக்கத் திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி மற்றும் சர போஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், சக்தியமங்கலத் தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார் ஆகி யோர் தலைமை தாங்கினர். இப்பிரச் சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.திருத்தணி காசலம், நகர செயலாளர் பி.வாசு தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கள் ஜி.வெங்கடாசலம், ஸ்டாலின் சிவக்குமார், ஒன்றிய துணை செயலா ளர்கள் முருகன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
சேலம்
ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இயக்கத்திற்கு சிபிஐ ஒன்றிய செயலாளர் பொன்னு சாமி தலைமை தாங்கினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப் பினர்கள் சீனிவாசன், சடையன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வாழப்பாடியில் நடைபெற்ற பிரச் சார இயக்கத்திற்கு சிபிஐ ஒன்றிய செய லாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், தாலுகா செயலாளர் வி. பழனிமுத்து, கந்தசாமி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் கண்ணன், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட குழு உறுப்பினர் வி. அய்யந்துரை உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் சிபிஐ (எம்எல்) மாநில குழு உறுப்பினர் சந்திரமோகன், சிபிஐ மாவட்ட செய லாளர் ஏ.மோகன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பொன்.ரமணி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.விமலன், சிபிஐ எம்எல் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், சிஐடியு சார்பில் எஸ் .கே.தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதேபோல், சேலம் கிழக்கு மாநகரம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஐ (எம்எல்) கமிட்டி செயலாளர் கே. நடராஜன் தலைமை தாங்கினார். இப்பிரச்சார இயக்கதில் இடதுசாரி கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.