தருமபுரி, ஏப்.10-விவசாய நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரூர் (தனி)சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். புதனன்று மொரப்பூர் பகுதி கிராமங்களில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இப்பகுதி கிராமங்களின் விவசாயத்தை பாதுகாக்கும் செனாக்கல் பாசன திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர்களுக்கு உதவித்தொகை. வீடு இல்லா ஏழைகளுக்கு மனைப்பட்டா. அரசு தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய கடன், மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்தார்.இப்பிரச்சாரத்தில், திமுக ஒன்றிய செயலாளர் சி.தேசிங்கு நிர்வாகிகள் பொறியாளர் சென்னகிருஷ்ணன், செந்தாமரைக்கண்ணன், ஆர்.இரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், ஒன்றிய செயலாளர்கள் மொரப்பூர் கே.தங்கராசு, அரூர் மல்லிகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, நிர்வாகி மூவேந்தன், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் வஜ்ரவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.முன்னதாக, தொட்டம்பட்டியில் துவங்கி பிரச்சாரம் சிங்கரிப்பட்டி, காந்திநகர், புதுக்காடு, சுண்டகாப்பட்டி, எம்.வெளாம்பட்டி, பள்ளிப்பட்டி, மருதிப்பட்டி, புதூர், கூச்சனூர், கல்லடிப்பட்டி, மூங்கில்பட்டி, கணபதிப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு, எஸ்.பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது.