தருமபுரி, ஏப். 28- மாம்பழங்களை செயற்கை முறையில் கனியவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெ.வெங்கேடசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி நகரில் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் கிடங்குகளில் உள்ள மாம்பழங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெ.வெங்கேடன் மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மாம்பழங்கள் உள்ளிட்ட எவ்வகைபழங்களையும் கார்பைடு கற்கள் மற்றும் ரசாயனம் ஆகியவற்றை பயன்படுத்தி செயற்கை முறையில் கனியவைக்கக்கூடாது. இம் முறையில் கனிய வைக்கும்பழங்களை உட்கொள்பவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உடல் நலம்கெடும். மேலும் செயற்கையாக பழுக்க வைப்பது உணவுபாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகும். எனவே, அனைத்து பழ வியாபாரிகளும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இயற்கையான முறையில் பழங்களைவிற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், செயற்கைமுறையில் பழங்களை கனிய வைத்துவிற்பனை செய்வது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.