tamilnadu

வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ

தருமபுரி, ஏப்.8- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருக உள்ளமகேந்திர மங்கலம் பகுதியை சேர்ந்தவர் லாரிஒட்டுநர் நாகலிங்கம்(46). இவர் தென்காசி அருகே அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நடுகாடுஅருகேலாரி சென்று கொண்டிருந்தபோது .பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல்தெரிவித்து அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பற்றி முழுவதும் எரிந்தது. இதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான லாரியும்,ரூ.1லட்சம் மதிப்பிலான வைக்கோலும் எரிந்து நாசமானது. இது குறித்துபாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.