tamilnadu

img

விவசாயி தீக்குளித்து தற்கொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

தருமபுரி, செப். 6- தருமபுரி அருகே விவசாய நிலத் தில், அத்துமீறி அரசு அதிகாரிகள் அளவீடு செய்வதைக் கண்டித்து விவ சாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம்,  காரிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது தும்பள அள்ளி ஊராட்சி, கிட்டேசம்பட்டி கிரா மம். இப்பகுதியில் அரசுக்கு சொந்த மான புறம்போக்கு மேய்ச்சல் நிலம் உள்ளது.

இதில் சில ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த கணபதியின் மூத்த மகன் சின்னசாமி என்பவர் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்,  அவர் விவசாயம் செய்யும் பகுதியில் தனிநபர் ஒருவர் பாதை அமைக்கக் கோரியான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்,  தனி நபருக்கு வழிப்பாதை வழங்க வருவாய்த் துறை யினர் அளவீடு செய்யும் பணியில் ஈடு பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்னசாமியின் குடும்பத்தினர் தர்ணா வில் ஈடுபட்டனர். மேலும், இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவ தாகவும், அதற்கு முன்னரே வழி அள விடுவது சட்ட விரோதமானது என கூறிய சின்னசாமியை காவல்துறை யினர் தகாத வார்த்தையில் திட்டி, தாக்கியுள்ளனர்

. இதனால், மனமு டைந்த சின்னசாமி தன் நிலத்தில் நின்றபடி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில், பலத்த காயமடைந்த சின்னசாமியை, அரு கில் இருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்நிலையில், இவர் சனியன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதனையடுத்து, அவரின் உற வினர்கள் சின்னசாமியின் உயிரிழப் புக்கு அரசு அதிகாரிகள் தான் கார ணம் என்றும், அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இறந்த உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மருத் துவமனையை முற்றுகையிட்டனர்.  

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி திமுக நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்கு மார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  தடங்கம் பி.சுப்பிரமணி ஆகியோர் உயிரிழந்த சின்னசாமியின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னர். மேலும், உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினர்.