tamilnadu

img

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தருமபுரி, டிச.14- அரூரில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப் பினர்கள், 23 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 300க்கும்  மேற்பட்ட கிராம வார்டு உறுப்பினருக்கான உள்ளாட்சித்  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும்  வாக்குகள் எண்ணும் மையங்கள் அரூர் ஆண்கள்  மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அறைகள், பாதுகாப்பு வசதிகள், முகவர்கள் அமருவதற்கான இடங்கள், அரசு அலுவ லர்கள், வேட்பாளர்கள் வந்து  செல்வதற்கான வழிகள், பாது காப்புக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது அரூர் சார்  ஆட்சியர் மு.பிரதாப், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், உதவி செயற்பொறியாளர் ராஜேந் திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சீனிவாச சேகர், வட்டார  வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் பழனியம்மாள், சத்தியவாணி ஆகியோர் உடனிருந்தனர்.