தருமபுரி, ஏப்.12-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்குஆதரவாக கூட்டணி கட்சியினர்வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்மருத்துவர் எஸ்.செந்தில்குமார்போட்டியிடுகிறார். வெள்ளியன்று அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் நல்லம்பள்ளி வட்டத்தில் மிட்டாரெட்டி அள்ளிபகுதியில் திவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.இப்பிரச்சாரத்திற்கு நல்லம்பள்ளி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமைவகித்தார். இதில், திமுக மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சி செயலாளர் ஆர்.சி.நடராஜன், நிர்வாகிகள் மோகன், சண்முகம், கிருஷ்ணசாமி, கமலேசன், எஸ்.கே.முருகன், பவுல்ராஜ், மாணிக்கம், சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, மாவட்டகுழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ஜெயராமன், கிளைசெயலாளர் சிவசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சங்கர், நிர்வாகிகள் அழகேசன், மாது, ஜெயகாந்தன், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதேபோல், இலளிகம் கிராமத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின்மாநிலத்தலைவர் ரெ.தங்கம், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், மாவட்டதொண்டர் அணி துணை அமைப்பாளர் எல்.டி.பழனிசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டதலைவர் துரைராஜ், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்தமிழ் ,ரங்கநாதன், கவின், சக்திவேல் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரத்தில் ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடுகட்டி குடியிருபோருக்கு மனைப்பட்டா, அனைத்து கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர்கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும், கேஸ் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை குறைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெறவும், அனைத்து கிராமங்களுக்கும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதித்திட்டத்தில்கூலி ரூ.300 மற்றும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலைகிடைக்கவும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என பிரச்சாரத்தில்கேட்டுக்கொண்டனர்.