தருமபுரி, பிப். 9- அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு சீர்குலைப்பதாக கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடத்திய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் நிறைவு பொதுக்கூட்டம் தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு சனியன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி யின் சார்பில் நடைபெற்ற இப்பொ துக்கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் கோவி.சிற்றரசு தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. தீர்த்த ராமன் வரவேற்றார். ஐஎன்டி யுசி. மாவட்டத் தலைவர்மோகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கள் பாலகிருஷ்ணன், இளங்கோ வன், ராஜாராம் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட காங் கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, மத்திய அரசு, தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பை அஸ்ஸாம் மாநி லத்தில் நடத்த ரூ.1,600 கோடி செலவு செய்துள்ளது. இந்தத் தொகையை, அந்த மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்ப டுத்தியிருக்கலாம். நமது நாட்டில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், அமைச்ச ரவை, மக்களவை, மாநிலங்களவை யில் விவாதித்து முடிவெடுக் கப்படும். அதற்கு பிறகே அது சட்டமாகும். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகிய இருவா் மட்டுமே ஆலோசனை செய்து இத்தகைய சட்டங்களையும், திருத் தங்களையும் கொண்டு வருகின் றனா். அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப் பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பில் 19 லட்சம் போ் குடியுரிமை வழங்க தகுதியற்றவா்களாக அறி வித்துள்ளனா். இந்த நாடு, விடு தலை பெற்ற பிறகு அம்பேத்கா் உள்ளிட்ட அறிஞா்கள் குழு, இரண்டு ஆண்டுகள் விவாதித்து அரசியலமைப்புச் சட் டத்தை இயற்றியது. இந்திய நிலப்ப ரப்பில் வாழும் அனைவரும் இந்திய குடிமக்களே என இச் சட்டம் கூறுகிறது. தற்போது, நாட்டை ஆளும் பாஜக தலைமையி லான மத்திய அரசு இந்த சட்டத்தை திருத்தம் செய்துள்ளது நாட்டு விடுதலைப் போராட் டத்தில் பங்கேற்ற கட்சிகளைச் சார்ந்த நாம்,ஒன்றுகூடி அவா்க ளின் செயல்களை முறியடிப்போம். இத்தகைய சட்டங்களை திரும்பப் பெற வைப்போம் என தெரிவித் தார். இந்நிகழ்ச்சியில் செல்வகுமார் எம்.பி, செயல் தலைவர்கள் விஷ்ணுபிரசாத் எம்.பி., மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹசன், தருமபுரி மாவட்ட திமுக. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மதி முக மாவட்டச் செயலாளர் அ.தங்க ராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.ஜெயந்தி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவாஜி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யாசின்தென்றல் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.