tamilnadu

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி, அக்.25- காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  தருமபுரி மாவட்ட விவசாயி கள் குறைகேட்புக் கூட்டம்  மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமதுல்லா கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்  பேசியதாவது, தட்கல் முறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், நீண்ட கால மாக மின் இணைப்புக்காக பதிவு  செய்த விவசாயிகளுக்கு முன் னுரிமை வழங்க வேண்டும். எண்ணேகொல்புதூர்-தும்பல அள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி மற்றும் ஜெத்தலாவ்-புலி கரை ஏரி இணைப்பு திட்டங்கள்  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப் பட்டது. இந்த திட்டங்களின் செயல்பாடு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை விவ சாயிகளுக்கு தெரியப்படுத்தி, அவற்றை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரியில் மிகை யாக செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில்  நிரப்பும் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என கடந்த இரண்டாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இத்திட்டத்தை நிறை வேற்றாததால், காவிரியின் மிகை நீர் வீணாக கடலில் கலக்கிறது. இத்திட்டத்தின் மூலம், ஒரு முறை ஏரிகளை நிரப்பினால், இரண்டு ஆண்டுகளுக்கு பாசன வசதி பெற முடியும். எனவே தரும புரி மாவட்ட ஏரிகளில் நீர் நிரப்பும்  திட்டத்தை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். பென்னாகரம் பகுதியில் சுமார்  20 ஆயிரம் பாரம்பரிய ஆலம்பாடி மாடுகள் உள்ளன. இந்த மாடு களுக்கு கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் தீவனம் கிடைப் பதில்லை. ஆகவே, இவற்றை அடிமாடுகளாக விற்கும் அவல நிலை அப்பகுதி விவசாயி களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,  கோடை காலங்களில் பென்னா கரம் வனப்பகுதியில், மாடு களுக்கு தண்ணீர் வழங்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இலவச மாக தீவனம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் வறட்சி  மாவட்டமாக அறிவிக்கப்பட் டிருந்து ஆனால் இதுவரை தென்னை மரங்களுக்கு இழப்பீடு  வழங்கவில்லை. பிற்பட்டோர்    நலத்துறை சார்பில் விவசாயி களுக்கு ஆழ்துளைக் கிணறு  கடன் வழங்க தேர்வு செய்யப் பட்ட பயனாளிகளுக்கு நீண்ட  நாள்களாகியும் கடன் தொகை  வழங்கப்படவில்லை. எனவே,  பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்தொகை விரைந்து  வழங்க வேண்டும்.  மேலும் மாவட் டத்தில் உள்ள மேய்ச்சல்  புறம்போக்கு நிலங்களை அரசு  கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தக் கூடாது என்றனர். மேலும் சந்தனம் மற்றும் சிவப்பு சந்தனம் மரங்கள் வளர்க்க அனுமதி வழங்க வேண்டும். கேசரிகுலே அணை வலது, இடது  புற கால்வாய்களில் உள்ள ஆக்கி ரமிப்புகள் அகற்ற வேண்டும்.  ஏ.கொல்லஅள்ளியில் இருந்து செட்டிக்கரை வரை செல்லும் மழைநீர்க் கால்வாயை தூர் வார  வேண்டும். தேசிய வங்கிகளில்  விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் சங்க  பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசி னர். இக்கூட்டத்தில், அரூர் சார்  ஆட்சியர் பிரதாப், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் பா.ச.சண்முகம் மற்றும் வேளாண், தோட்டக் கலைத்துறை அலுவலர்கள்  மற்றும் விவசாயிகள் சங்க பிரதி நிதிகள் பங்கேற்றனர்.