தருமபுரி, ஜூன் 19- அரூர் அரசு துணை மாவட்ட மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 150 உள் நோயாளிகளும், சுமார் 1,200 புற நோயாளிகளும் சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த மருத்துவ மனை வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையம் உள்ளது. தமிழக முதல்வரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அரூர், மொரப்பூர், அனுமன்தீர்த்தம், கோட்டப்பட்டி, சித்தேரி, கோபிநாதம்பட்டி கூட்டு சாலை, சிந்தல்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மையப் பகுதியாக அரூர் அரசு மருத்துவமனை உள்ளது. அதே போல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழை எளிய மக்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு அதி கம் பேர் வருகை தருகின்றனர் இதையடுத்து, தேசிய தரச்சான்று பெறும் முயற்சியில் அரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் ரவீந்தர் ஹால்வாட், மீனு பரத்வாஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, அரூர் அரசு துணை மாவட்ட மருத் துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண் ணிக்கை, மகப்பேறு சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை, சிகிச்சையின் தரம், உயர்காக்கும் மருந்துகளின் இருப்புகள், அவசரகால சிகிச்சைகள், மருத்துவமனை வளாக தூய்மைப் பணிகள், குடிநீர் மற்றும் மின்விசிறி வசதிகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.