தருமபுரி, செப்.19- தருமபுரி மாவட்டம், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 61,338 பயனாளிகளுக்கு ரூ.251.45 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டம், ஆதரவற்ற விதவை உதவித் தொகை திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப் பட்டோர் உதவித்தொகை திட்டம், முதிர்கன்னிகள் உதவித்தொகை திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் திட்டம் மற்றும் இலங்கை அகதிகள் ஓய்வூதியத்தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் வீதம் வழங் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2016-17, 2017-18, 2018-19, 2019-20 ஆண்டு ஆகஸ்ட் வரை இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 34,342 பயனாளிகளுக்கு ரூ.143,44,16,587 மதிப்பிலான உதவித்தொகையும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,175 பயனாளிகளுக்கு ரூ.4,62,25,152 உதவித் தொகையும், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை திட்டத்தின் கீழ் 10,154 பயனாளிகளுக்கு ரூ.42,19,90,107 மதிப்பிலான தொகையும், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 4,727 பயனாளிகளுக்கு ரூ.16,97,13,198 தொகையும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 4,517 பயனாளிகளுக்கு ரூ.18,02,02,253 தொகையும், ஆதரவற்ற கணவனால் கைவிடப் பட்டோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2,669 பயனாளிகளுக்கு ரூ.10,55,16,902 தொகையும், முதிர்கன்னிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 442 பயனாளிகளுக்கு ரூ.1,70,49,360 தொகையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் திட்டத்தில் 3,108 பயனாளிகளுக்கு ரூ.13,20,34,866 மதிப்பிலான உதவித்தொகையும், இலங்கை அகதிகள் ஓய்வூதியத் தொகை திட்டத்தின் கீழ் 204 பயனாளிகளுக்கு ரூ.80,32,570 மதிப்பிலான உதவித்தொகை என 61,338 பயனாளிகளுக்கு ரூ.251.45 கோடி உதவித்தொகையாக வழங்கப் பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் சம்பந்தப் பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலுள்ள தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.