தருமபுரி,டிச.10- தர்மபுரி மாவட்டம், பென்னா கரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் ஊராட்சி பத விகளுக்கான உள்ளாட்சி மன்ற தேர்தல் தமிழக தேர்தல் ஆணை யத்தால் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தர்ம புரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட பனைக்குளம் ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் பத விக்கு வேட்பு மனு தாக்கல் திங்க ளன்று துவங்கியது. இந்த ஊராட் சிக்கு உட்பட்டு மணல்பள்ளம், பனைக்குளம், திருமல்வாடி, வத் திமரத்தல்லி, கூட்டமரத்தள்ளி உள்ளிட்ட ஏராளமான கிராமங் கள் உள்ளன. இங்கு சுமார் 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ளனர். இதில் 11 வார்டு உறுப் பினர்கள் தேர்வு செய்ய வேண் டும். இந்நிலையில் திங்களன்று மாலை ஊர் பெரியவர்கள் முன் னிலையில் திருமல்வாடி பள்ளி அருகே இந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான பதவி ஏலம் நடை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் திருமல்வாடி சார்ந்த ஒருவர் 24 லட்ச ரூபாய்க்கு தலைவர் பதவியை ஏலம் எடுத் துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பனைக்குளம் ஊராட்சி தலைவர் பதவி தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வருகிறது. 5 லட்ச ரூபாயில் துவங் கப்பட்ட இந்த ஏலம் 35 லட்ச ரூபாய் வரை சென்றுள்ளது. இந்த தலைவர் பதவிக்கு 2016ஆம் ஆண்டு 35 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆனால், தேர்தல் நிறுத்தப்பட்ட காரணத்தால் ஏலம் எடுத்தவர் இடமே அந்த பணம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தேர் தல் அறிவிப்பு வந்து வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில் பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டு 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெண்ணாகரம் வட்டாட்சியரிடம் கேட்டபோது, அந்த ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தேர்தலின்போது சுழற்சி முறையில் அவர்கள் அவர்களில் ஒருவரை தேர்வு செய்து கொள்வது வழக்கமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனடிப்படை யில் இந்த முறை திருமல்வாடி பகுதிக்கு தலைவர் பதவி வழங் கப்பட உள்ளதாகவும், அதில் சில குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதேநேரம், ஏலம் எதுவும் நடை பெறவில்லை என்று அவர் மறுத் துள்ளார். இதேபோல் உள்ளாட்சி தேர் தல் நடத்தும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட அதிகாரியான பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனிடம் கேட்ட போது, அவரும் இதே கருத்தை கூறினார்.