tamilnadu

img

டிஜிட்டல் வேடிக்கை

தமிழக சட்டப்பேரவை முழுமை யாக டிஜிட்டல் மயமாக்கப்படு கிறது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது. இதை, சட்டப்பேரவை கூட்ட அரங்கில் பேரவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பேசிய பேரவைத் தலைவர் தனபால்,” இந்த இணையதளம் மூலம் சட்டப்பேரவை கூட்ட நிகழ்வுகள், குறிப்புகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ‘காகிதமில்லா’ சட்டப் பேரவை கொண்டு வருவதே இதன் இலக்கு” என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் தமிழக சட்டப்பேரவையும் வேகவேகமாக தயாராகி வருகிறது. மாற்றம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடை யாது. இந்த மாற்றம் யாருக்காக? எதற்காக? எப்படி இருக்க வேண்டும்? கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவை நிகழ்வுகள் தொ டர்பான தகவல்கள் அடங்கிய “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை” வலை தளத்தை (வெப் சைட்) திறந்து வைத்தார். இந்த வலை தளத்திற்கு நுழைந்தபோது பேரவையின் வரலாறு, பேரவைத் தலைவரின் இருக்கை, புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றின் வர லாறுகளுடன் முக்கிய ஆவணங்களை பார்க்க, படிக்க முடிந்தது.

அலங்கோலம்...

அந்த வலைதள படத்தொகுப்பிற்குள் (கேலரி) நுழைந்தபோது பதினைந்தாவது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட எம்எல் ஏக்கள் 25.5.2016 ஆம் தேதியில் தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது. 16.6.2016 அன்று ஆளுநர் ரோசய்யாவை பேரவைத் தலைவர் தனபால், முதல மைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து பேரவைக்கு வரவேற்றதும் அலங்கரிக்கிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அமர்ந்தாலும் சில மாதங்களிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அமர்ந்தது, எடப்பாடி அணியின் நிதியமைச்ச ரான டி. ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்த புகைப்படங்கள் இடம் பிடித்திருக் கும் இந்த வலைதள படத்தொகுப்பில்  ஜெ. மரணத்தை தொடர்ந்து முதலமைச்சரா கவும், தர்ம! யுத்தத்திற்கு பிறகு துணை முதல்வராகவும் நிதி அமைச்சராகவும் பொ றுப்பேற்று பட்ஜெட் தாக்கல் செய்து வரும் ஓபிஎஸ் படம் ஒன்றுகூட பதிவேற்றம் செய்யப் படவில்லை. 

வேடிக்கை-வினோதம்...

இந்த வலைதள பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “யார்-எவர்” என்ற 810 பக்கம் கொண்ட தொகுப்பு -2016 ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளனர். திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற  அதிமுகவின் எஸ்.எம். சீனிவேல் எம்எல்ஏ வாக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வ தற்கு முன்பு 25.5. 2016 மறைவுற்றதையும் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் மரண மடைந்ததையும் பதிவு செய்தவர்கள், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி ஆகி யோர் மறைந்ததை பதிவு செய்ய நேர மில்லையா? மறந்து விட்டார்களா? என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்! எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்கள் 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை பதிவு செய்தவர்களுக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை வழங்கியதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி யின் பெயர், இலாக்கா, அவரது புகைப்படம் இன்னமும் அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்திருப்பதை மாற்றாதது ஏன்?

அதேபோல், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை வெளிப்படையாகவே விமர்சித்ததால் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப் பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பெயரும் புகைப்படத்தை யும் “யார் எவர்” என்ற பட்டியலில் இருந்து நீக்கு வதற்கு இன்னமும் மனமில்லை போலும்.

மர்மம்...

பதினைந்தாவது சட்டமன்றப் பேரவை யின் முதல் கூட்டத்தொடர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு ஏழு கூட்டத்தொடர் நடந்துள் ளது. ஆனாலும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 16ஆம் தேதிக்கு பிறகு நடந்த ஆளுநர் உரை, பட்ஜெட், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், அமைச்சர்கள் பதிலுரை,முத லமைச்சரின் அறிவிப்புகள் எதையுமே பதி வேற்றம் செய்யாததை பேரவைத் தலை வரும் செயலாளரும் கண்டுகொள்ளாதது ஏன்?

இது மட்டுமா? பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் பணி ஓய்வு பெற்றதைத் தொ டர்ந்து அந்த இடத்தில் பணி மூப்பு அடிப் படையில் தற்காலிக செயலாளராக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பூபதியும் ஓய்வு பெற்றார். சீனியர்கள் பலர் இருந்தும் வழக்கமான நடைமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு பேரவைத் தலை வரின் தனி செயலாளராக பணியாற்றிய கே. சீனிவாசனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்பு செயலாள ராக அமர்த்தினர். இதை எதிர்த்து நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த 15வது சட்டப்பேரவையின் ஆயுட்காலமும் இன்னும் ஓராண்டில் முடிய உள்ளது!

இந்த வலைத்தள பக்கத்தை அலசிய போது, “இந்த சட்டமன்றம் விசித்திரம் நிறைந்த வேடிக்கையான பல நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. புதுமையான பல மனி தர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த வலைதள பக்கம் ஒன்றும் விசித்திரமான தல்ல. இதை பார்க்கும் படிக்கும் யாரும் புது மையானவர்கள் அல்ல. வாழ்க்கைப் பாதை யிலே சர்வ சாதாரணமாகப் பார்க்கும் ஜீவன்க ளில் ஒருவர்” என்பதாக இருக்கிறது. தங்களின் இதய தெய்வத்தால் தொடங்கி வைக்கப்பட்ட ‘வெப்சைட்’ செயல்பாடே அலங்கோலமாக இருக்கும் நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவை  டிஜிட்டல் மயமாகிறது! 

சி.ஸ்ரீராமுலு