திருவனந்தபுரம்:
கேரளத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல் கற்றலை உறுதி செய்வதற்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுக் கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள ஒன்றரை லட்சம் மடிக்கணினிகள் பயன் படுத்தப்படும். வீடுகளில் டிஜிட்டல் கற்றலுக்கு வாய்ப்பற்றவர்களுக்காக நூலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பொதுக் கல்விநிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ளும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிவி வாங்க 75 சதவீதம் தொகையை கேஎஸ்எப்இ வழங்கும். சோதனை முறையில் செயல்படுத்துவதைப் போன்று கற்றல்மையங்கள் செயல்படும் என்று நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
மடிக்கணினி வாங்க மைக்ரோ சீட்டுகள் பள்ளி குழந்தைகள் மடிக்கணினிகள் வாங்க மைக்ரோ சீட்டுகளை கேஎஸ்எப்இ தொடங்கும். குடும்பஸ்ரீ உடன் இணைந்து மாதம் ரூ.500 வீதம் 30 மாதங்கள் செலுத்தும் ரூ.15,000 க்கான சீட்டுகள் இவை. மாதாந்திர தவணைகளை தவறாமல் செலுத்து வோர் மூன்று மாத தவணைகள் செலுத்த வேண்டாம். குடும்பஸ்ரீ அலகுக்கு செலுத்தப்படும் சீட்டுப்பணத்தில்இரண்டு சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையின் உதவியுடன் குடும்பஸ்ரீ மடிக்கணினிகளை வழங்கும். மடிக்கணினியின் விலையில் மீதமுள்ள பணம் திருப்பித் தரப்படும்.