புதுதில்லி,ஜன.3- தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக தில்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் இலவச அதிவேக வைபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தில்லி மெட்ரோ ரயில் தலைவர் மங்கு சிங் தொடங்கி வைத்தார். ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா வில்தான் மெட்ரோ ரயிலில் இந்த வசதி அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. படிப்படி யாக, மற்ற வழித்தடங்களி லும் இலவச ‘வைபை‘ கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.