tamilnadu

img

ஆன்லைனில் அத்தியாவசியப் பொருள் மட்டும் விற்க அனுமதி

புதுதில்லி,ஏப்.19- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்றும் அதன்பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20 முதல் பொருட்களை விற்பனை செய்ய கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்க கூடாது. ஊரடங்கு முடியும்வரை அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்க அனுமதி வழங்கப்படும்.  அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது.