tamilnadu

img

தனியார் துறையை ஊக்கப்படுத்தும் அரசு

மோட்டார்  வண்டிகள்  பராமரிப்பு  நிறுவன  தொழிலாளர்கள்  சங்கம் சாடல்

திருநெல்வேலி, செப். 11– தமிழகத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் அந்தந்த மாவட்டங்க ளில் அரசு துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் வாக னங்கள் அனைத்தும் பழுது பார்த்தல், பராமரித்தல் உட்பட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

20 ஆயிரம் அரசு துறை வாகனங்கள்

தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் அரசு  துறை வாகனங்களில் ஏற்படும் பழுது கள் நீக்கம், பராமரிப்புகள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் இந்நிறு வனங்கள் மூலம்  செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆட்சி யர்கள் முதல் கீழ் நிலை அதிகாரிகள் வரையிலான வாகனங்கள், அமைச் சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் வாகனங்கள், பாதுகாப்பு துறை வாக னங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்க ளுக்கும் அரசு நிறுவனம் மூலமே பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.   இதில் பிட்டர், மெக்கானிக், வெல்டர்,  பெயிண்டர், கார்பெண்டர், ஆபரேட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 24பணியிடங்க ளில் பல்வேறு தொழில் நுட்ப பணி யாளர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

தள்ளாடும் நிறுவனங்கள்

தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார்  1300 பணியிடங்களில் 825 பணி யிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 1475 பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதில்  துவக்க நிலை தொழில் நுட்ப பணியிடங்கள் 445 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. தமிழ கத்தில் கடந்த  2007ஆம் ஆண்டுக்கு  பிறகு இப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் சுமார் 12 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பராமரிப்பு நிறு வனங்கள் தள்ளாடி வருகின்றன.  இதனால் அந்தந்த மாவட்டங்க ளில் உள்ள அரசு துறை வாகனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.  அரசு நிறுவனங்களில் குறைந்த செல வில் தரமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. மேலும், தரமான உதிரி பாகங்கள் மூலம் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது அரசு நிறுவனங்களுக்கும் உதிரி பாகங்  கள் சப்ளை செய்வதிலும் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தனியார் நிறுவன குளறுபடி

தனியார் நிறுவனங்களில் அதிக  செலவில் தரம் குறைந்த உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு அரசு நிதி  கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுவ தாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பல்வேறு அரசு அலுவலகங்களில் பரா மரிப்பு செலவு என்ற பெயரில் முறை கேடுகளும் நடந்து வருவதாக கூறப்படு கிறது. பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படாமல் உள்ளதால் தனியார் நிறுவனங்களுக்கு அரசு துறை வாக னங்கள் பராமரிப்பு, பழுது பார்க்கச் செல்லுமாறு அரசே ஊக்குவிப்பதாக உள்ளதாகவும் இந்நிறுவன தொழி லாளர்கள் கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பு பறிப்பு 

மேலும், இந்த அரசு நிறுவனங்க ளில் பிட்டர், மெக்கானிக், வெல்டர்  உள்ளிட்ட தொழிற் கல்வி பணியிடங்க ளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படை யில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டு  வந்தனர். ஆனால் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் தொழிற் கல்வி படித்த ஏழை, நடுத்தர இளை ஞர்களின் வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார்  வண்டிகள் பராமரிப்பு நிறுவனங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, தரமான உதிரி பாகங்  களை வழங்கவும் அரசு நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அரசு மற்றும் போலீஸ் துறை வாகனங்கள் தனியார் நிறுவனங்களில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்கு அதிக செலவு செய்து அரசு நிதி இழப்பை தடுக்கவும், தொழிற் கல்வி படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் உரிய வேலைவாய்ப்புகளை வழங்க வும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  எனவும் தமிழ்நாடு அரசு நிறுவன தொழி லாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சங்கக் கூட்டம்

இப்பிரச்சனைகள் குறித்து விவா திக்க தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டி கள் பராமரிப்பு நிறுவன தொழிலா ளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்  திருநெல்வேலியில் நடந்தது. மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவையில் மாநாடு

இதில், கோவையில் வரும் 21ஆம்  தேதி சங்கத்தின் 8வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும்,  இதற்காக அந்தந்த மாவட்டங்களில்  அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறு வனத்தை சிறப்பாக இயங்க செய்ய அரசு உரிய நடவடிக்கைளை எடுக்க இம்மாநாட்டில் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இவ்விபரங்களை மாநில தலைவர் வெங்கடேசன் தெரி வித்தார்.