கடலூர்:
மின் கட்டணத்தை மாதந் தோறும் கணக்கெடுத்து பணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசினர் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அதிமுகவும், பாஜகவும்வெளி நடப்பு செய்து விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர். அடுத்த கட்டமாக செப் டம்பர் மாதம் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் அறிவித்ததையும் வரவேற்கிறோம். மறுவாழ்வு மையங்களில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமாக செயல்படக் கூடிய நிலையைஉருவாக்க வேண்டும். குடிசை மாற்று வாரியம் மூலம்வீடு கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசின் திட்டத்தில் கடந்த தமிழக அரசுஇணைத்து விட்டது. இதனால், வீடு பெறுவோர் ஒன்றிய அரசுக்குரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், கலைஞரால் கொண்டு வரப்பட்ட குடிசை மாற்றுவாரியம் பயனற்றதாக மாறி வருகிறது. எனவே, இலவசமாக வீடுவழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2 ஆயிரம் இடங்களில் பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மாநிலம் முழுவதும் வருகிற 5 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அகில இந்திய அளவில் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து இயக்கம் நடத்த உள்ளோம். மோடி அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என்ற நிகழ்ச்சியை சுமார் இரண்டாயிரம் இடங்களில் நடத்த உள்ளோம். 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த அகில இந்தியஅளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கொரோனா காலத்தில் மின்கட்டணம் கணக்குஎடுக்காமல் கடந்த முறை செலுத்தப்பட்ட பணம் வசூலிக்கப்பட் டது. இதனால், முழுமையாக கணக்கு எடுக்கும் போது சிலருக்குகூடுதலாக கட்டணம் வந்திருக்கலாம். ஆனால், ஏராளமானவர் களுக்கு கடந்த முறையை விடகுறைந்த கட்டணம் வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதாமாதம் மின் கட்டணம் கணக்கிட்டு அதனை வசூலிக்கும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இச்சந்திப்பின் போது மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி,மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எஸ்.திருஅரசு, ஆர். ராமச் சந்திரன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.