கடலூர்:
கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண் டும் என்று கைத்தறி சங்க மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது.
கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இ.முத்துக் குமார், சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மாநிலப் பொருளாளர் என். ஜீவா, மாநில துணைத் தலைவர் எஸ். தட்சிணாமூர்த்தி, மாநில நிர்வாகிகள் பி. பழனியம்மாள், ராஜேந்திரன், உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் நூல் விலை, கோறா விலை, சரிகை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜரிகை உற்பத்திக்கு தேவையான வெள்ளி சரிகையை மானிய விலையில் வழங்க வேண்டும். நெசவாளர்கள் வங்கியில் வாங்கிய தொழில் சார்ந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கைத்தறி நெசவாளர்கள் தொழில் கடன்கள் வழங்க தனிக் கடன் வங்கி உருவாக்க வேண்டும், தனியார் மற்றும் கூட்டுறவு நெசவாளர்களுக்கு தற் போதைய விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் கூலி உயர்வு அறிவிக்க வேண்டும், கைத்தறி ரகங்கள் தற்போது உருவாகியுள்ள புதிய ரகங்களை உள்ளடக்கி மாதம் 20 ஆயிரம் ரூபாய் கூலி கிடைக்கும் வகையில் குறைந்த பட்ச கூலி சட்டம் திருத்தி வெளியிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
கைத்தறி நெசவுக்கு போனஸ் சட்டம் கொண்டுவரவும், 1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கைத் தறி நலச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும், ஒரு வருடத்திற்கு ஒருமுறை மழைக்கால நிவாரணம் பத்தாயிரம் வழங்கவும் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத் தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும். கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகள் மானியங்கள் குறைப்பை கைவிட வேண்டும், நெசவாளர் ஓய்வூதியம் மாதம் ரூ. 5000 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் குடும்ப மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும், அனைத்து நபர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.