இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் (அமெரிக்காவின் முக்கிய நகரமான புளோரிடாவில்) இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி டி-20 ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகளின் ஒரு பகுதியான கயானாவில் செவ்வாயன்று நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்திய அணிக்கு இந்த டி-20 ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான். இருந்தாலும் விண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் விண்டீஸ் அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் கயானா டி-20 ஆட்டம் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நகரும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இடம் : புரோவிடன்ஸ்
மைதானம், கயானா
நேரம் : இரவு 7 மணி
(இந்திய நேரம்)