tamilnadu

img

விசாக் டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா பதிலடி

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் கடற்கரை  நகரமான விசாகப்பட்டினத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் கள மிறங்கிய இந்திய அணி மயாங்க் அகர்வா லின் இரட்டை சதம் மற்றும் ரோஹித் சர்மா வின் சதத்தின் உதவியால் முதல் இன்னி ங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திய வம்சா வளியான கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டு களை கைப்பற்றினார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்தது.  வெள்ளியன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடை வேளைக்குள் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தொடக்க வீரர் டீன் எல்கர் இந்திய அணியின் மிரட்ட லான பந்துவீச்சை அசால்ட்டாக சமாளித்து சதமடித்து அசத்தினார்.கேப்டன் டு பிளசிஸ் எல்கருடன் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன் குவிக்க தென் ஆப்பிரிக்க அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் தாறுமாறாக எகிறியது.  பிளசிஸை(55) அஸ்வின் கழற்ற, எல்கரை (160) ஜடேஜா கழற்றினார்.  இனி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர் டி காக் (111) இறுதிக்கட்ட அதிரடியில் களமிறங்கி சதத்துடன் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் விகிதத்தை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.இவரை அஸ்வின் வெளியேற்றினார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது. கேசவ் மகாராஜ், முத்துச்சாமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.  இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.