12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டரான தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் உலகக்கோப்பையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விஜய் சங்கருக்குப் பதிலாக இளம் வீரர் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.