கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 139-வது சீசன் திங்களன்று தொடங்குகிறது. மற்ற கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் பிட்ச் பிரச்சனை இல்லை. ஆனால் அமெரிக்க ஓபன் மைதானங்களில் பிட்ச் சற்று கடினமாக இருப்பதால் நட்சத்திர வீரர்கள் கூட சற்று திணறலுடன் தான் வெற்றியை ருசிப்பார்கள். இதனால் முதல் சுற்று ஆட்டம் கூட இறுதிப்போட்டியைப் போல அதிரடியாக நடைபெறும் என்பதால் டிக்கெட் விற்பனை சூடுபிடிக்கும்.
பரிசுத்தொகை:
ஒற்றையர் பிரிவு - ரூ.27 கோடி
இரட்டையர் பிரிவு - ரூ.5 கோடி
கலப்பு இரட்டையர் - ரூ.1 கோடி