tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4-வது சுற்றில் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன் றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா வின் நோவக் ஜோகோவிச், அமெரிக்கா வின் டேனிஷ் குட்லாவை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன் னேறியுள்ளார். முன்னணி வீரர்களான ரஷ்யாவின் மெத்வதேவ், பல்கேரியாவின் டிமிட்ரோவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறி யுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசை யில் 5-வது இடத்தில் உள்ள உக்ரைனின் ஸ்விட்டோலினா சக நாட்டு வீராங்கனை யான டயானாவை 6-2, 6-0 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும் அமெரிக்காவின் கீஸ், சீனாவின் வாங் ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.