உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தொடக்க ஆட்டங்களில் திணறினாலும் பலமான இங்கிலாந்து அணியை (27-வது லீக்கில்) வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை குறித்து அதிகம் கனவு கண்டது. கோப்பை வெல்லும் எனக் கணிக்கப் பட்ட தென் ஆப்பிரிக்கா அணி சொதப்ப லான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வாய்ப்பை இழந்ததால் அந்த அணி நம்மை என்ன செய்யப் போகிறது என்ற தெம்புடன் 35-வது லீக் ஆட்டத்தில் இலங்கை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கம் கலந்த கோபத்துடன் இருந்த தென் ஆப்பிரிக்கா அணி கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளைப் புரட்டி எடுக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டது. இதனை அறியாத அப்பாவி இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திவிடுவோம் என அசால்ட்டாக விளையாடியது. பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் ருத்ரதாண்டவம் ஆடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியைப் பந்தாடியது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா அணியை இலங்கை வென்றிருந்தால் அரையிறுதி செல்ல அதிர்ஷ்ட வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். அதனை வேரோடு அடியோடு மாற்றிவிட்டது தென் ஆப்பிரிக்கா. நீங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போனதற்கு எங்களை ஏன் இப்படி துவம்சம் செய்தீர்கள் என்ற எண்ணத்துடன் மனதிற்குள் இலங்கை வீரர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர்.