tamilnadu

img

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாசிம் அம்லா ஓய்வு

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஹாசிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

தென் ஆப்பிரிக்கா வீரரான ஹாசிம் அம்லா (36 வயது), டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் ஆவர்.  இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300க்கும் அதிகமான ரன் குவித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா.

அதே போல், இவர் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளர், ஒரு நாள் போட்டிகளில், 8,113 ரன்கள் குவித்துள்ளார். அதில், 27 சதங்கள் அடித்துள்ளார். மொத்தமாக, இவர் 349 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 18,000 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக 55 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.