tamilnadu

img

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான சச்சின் தெண்டுல்கர் 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.  தொலைக்காட்சி வர்ணனை மற்றும் கிரிக்கெட் தொடர்பான இதர நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் சச்சினுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) வாழ்நாள் சாதனையாளர் விருது (ஹால் ஆப் பேம்) வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டிற்கும் ஹால் ஆப் பேம் கவுரவம் கிடைத்துள்ளது.  ஐசிசி-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற 6-வது இந்திய வீரர் சச்சின்  ஆவார். இதற்கு முன் பிஷன் சிங் பேடி (2009), சுனில் கவாஸ்கர்(2009), கபில் தேவ் (2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட் (2018) ஆகியோர் ஹால் ஆப் பேம் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.