தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற் றுப்பயணம் மேற்கொண் டுள்ள இங்கிலாந்து அணி வியாழனன்று டெஸ்ட் தொடரை தொடங்குகிறது. 4 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செஞ்சுரியனில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங் கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சா ளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற அரிய சாத னையை ஆண்டர்சன் படைக்கவுள்ளார். இதுவரை 150 டெஸ்டுகள் விளை யாடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் (இந் தியா - 200), ரிக்கி பாண்டிங் (ஆஸி., - 168), ஸ்டீவ் வாஹ் (ஆஸி., - 168), காலிஸ் (தெ.ஆ., - 166), சந்தர்பால் (மே.இ., - 164), டிராவிட் (இந்தியா - 164), அலாஸ்டர் குக் (இங்கி., - 161), ஆலன் பார்டர் (ஆஸி., - 156) ஆகியோர் தரவரிசைப் படி வரிசை யாக உள்ளனர். இவர்களில் காலிஸ் மட்டும் ஆல்ரவுண்டர். மற்ற அனைவரும் பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆண்டர்சன் இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார். இதுவரை 149 டெஸ்டுகளில் விளை யாடியுள்ள ஆண்டர்சன், 575 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக் கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி யுள்ள வேகப்பந்துவீச்சாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு (140 கி.மீ.) வேகத்தில் பந்து வீசினாலும் 160 கி.மீ. வேகத்தில் பிரதி பலிப்பது போன்று இருக்கும். வேகமும், சுவிங்கும் ஒரே வேறுபாட்டில் எகிறும் என்பதால் ஸ்டெம்பை பாதுகாப்பது சிர மமான விஷயம்.