tamilnadu

img

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தரவரிசை இந்திய அணி முதலிடம்

டெஸ்ட் போட்டியின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்கும் வகை யில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெய ரில் டெஸ்ட் உலகக்கோப்பை தொடரை நடத்தி வருகிறது. 2021-ஆம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் தரவரிசை பட்டியலில்    இந்திய அணி 160 புள்ளிகளுடன் முத லிடத்தில் உள்ளது. 60 புள்ளிகள்பெற்றுள்ள நியூஸிலாந்து அணி 2-வது இடத்திலும், இலங்கை அணி (60 புள்ளிகள் - வெற்றி,  தோல்வி அடிப்படையில்) 3-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 56 புள்ளிகளுடன் 4-வது மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.  தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலக சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் வெற்றியை ருசிக்க வில்லை. பாகிஸ்தான், வங்கதேச அணிகள் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் காலடி வைக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.