கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க அதிரடி வீரர் சேவாக் வித்தியாசமான மனநிலை உடையவர். அதாவது களமிறங்கிய அடுத்த நிமிடமே அதிரடியாக ரன் குவிக்க முயலுவார். இயலாவிட்டால் ஆட்டமிழந்து பெஞ்சில் அமர்ந்துவிடுவார். ஆனால் 7 ஓவர்களுக்கு மேல் மைதானத்தில் நின்று விளையாடிவிட்டால் பந்திற்கு மசால் தடவியதை போலத் தழும்பை உருவாக்கி விடுவார். முதல் ஓவரில் 4 பந்துகளை மட்டும் வீணடித்து பிட்சின் தன்மையை உணருவார். அதன் பின்பு பந்தை வீணடிக்காமல் வானவேடிக்கைக்குத் தயாராகி விடுவார். சேவாக் களத்திலிருந்தால் ரன் ரேட் சிக்கல் வராது. டக் அவுட் ஆனாலும், சதமடித்தாலும் ஒரே மனநிலையில் சலனமில்லாமல் பெஞ்சில் இருப்பார். பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவார். ஆனால் எங்கு இருக்கிறார் எனக் காண முடியாது. ஸ்லிப் கேட்ச் பிட்சில் அதிகம் நிற்பார்.