தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்
இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாக கமிட்டி தேர்தல் அக் டோபர் 22-ஆம் தேதி அன் றும், மாநில கிரிக்கெட் சங்கங் களுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்றும் நடைபெறுவதாகத் திட்டமி டப்பட்டிருந்த நிலையில், தமி ழக கிரிக்கெட் சங்கத்தில் மட் டும் விதிமுறை பிரச்சனை காரணமாக உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தமிழ்நாடு கிரிக் கெட் சங்க தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், விதிமுறை களுக்கு உட்பட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வியாழ னன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் உச்சநீதிமன்றம் மற் றும் பிசிசிஐ விதிமுறைகளின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும், தேர்தல் நடத்தப்பட்டாலும் இறுதி முடிவு எங்கள் கையில் தான் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
யார் இந்த ரூபா குருநாத்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட் ஸின் உரிமையாளருமான ஸ்ரீனிவாச னின் மகள் தான் இந்த ரூபா குரு நாத், குருநாத் என்பது அவரின் கண வர் பெயர். ரூபாவின் கணவரை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முன்னாள் உரிமையாளரும், சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டவருமான குருநாத் மெய்யப்பனின் மனைவி தான் ரூபா.
ரூபாவின் கணவர் மீது சூதாட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், எப்படி தமிழக கிரிக்கெட் தலைவர் பொறுப்பை ஏற்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.