தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார்.
இது குறித்து பிசிசிஐ கூறியதாவது, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் வீரர்களிடம் வழக்கமான மருத்துவ சோதனையில் ஈடுபட்ட போது, பும்ரா-வுக்கு முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. ஆகையால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பும்ரா கலந்துகொள்ளமாட்டர் என்று அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதில் உமேஷ் யாதவ் விளையாடுவார் எனவும் அறிவித்துள்ளது.