tamilnadu

img

ஐசிசி ஒருநாள் அந்தஸ்து

விளையாட்டு உலகில் தற்போது 50-க்கும் (அங்கீகாரம்) அதிகமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் எளிதாகச் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம்.ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரைச் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால் இடியாப்ப சிக்கலை அவிழ்த்துத் தான் முன்னேற வேண்டும்.நன்றாக விளையாடினாலும் சரி, அரைகுறையாக விளையாடினாலும் சரி முதலில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அந்தஸ்து பெற வேண்டும்.ஐசிசி ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு நாடும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. பார்ம் இல்லையெனில் சர்வதேச அந்தஸ்து பெற ஏறக்குறைய 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற உள்ள உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, ஓமன் அணிகளுக்கு ஐசிசி., ஒருநாள் அந்தஸ்து அளித்துள்ளது.இந்த தொடரில் ஓமன், அமெரிக்கா, நமீபியா, ஹாங்காங், கனடா, பப்புவா நியூகினியா ஆகிய அணிகள் பங்கேற் கின்றன. உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்அணிகள் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். புதிதாக ஒருநாள் அந்தஸ்து பெற்றுள்ள அமெரிக்கா, ஓமன் அணிகள் அடுத்த 2 ஆண்டில் 36 சர்வதேச ஒருநாள் போட்டி களில் பங்கேற்கவுள்ளன. 15 ஆண்டுகால போராட்டத்துக்குப்பின் அமெரிக்க அணி ஒருநாள் அந்தஸ்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.