தவான் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உல கக்கோப்பை தொடருக்குப் பின் சொந்த விடுப்பு மூலம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ராணுவத்தில் சேர்ந்ததிலி ருந்து தோனியின் ஓய்வு முடிவை பல்வேறு தரப்பினர் விவாத பொரு ளாகப் பேசி வருகின்றனர். இத னால் தோனியின் ஓய்வு முடிவு பிரச் சனை நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், இந்திய அணி யின் தொடக்க வீரர் சிக்கர் தவான் தோனியை மிகப்பெரிய தலைவர் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ,”கிரிக்கெட் வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் தோனியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. தன்னுடன் விளையாடும் வீரரின் திறனையும் அவர் நன்கு அறிந்து வைத்திருப்பார். ஒவ் வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த அளவிற்கு ஆத ரவளிக்க வேண்டும் என்பதையும் தோனி நன்கு அறிந்தவர். கேப்ட னாக இருந்த காலத்தில் இந்தியா பெற்ற வெற்றியின் மூலம் அவரது உண்மையான பலத்தைக் காண லாம். கேப்டன் விராட் கோலி உட்பட தற்போதைய அணியின் உறுப்பினர்கள் தோனி மீது மிகுந்த மரியாதை செலுத்துகின்றனர். நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், நாங்கள் அவரை மதிக்கிறோம். கோலியின் இளமை பருவத்தில் தோனி அவருக்கு பல் வேறு வகையில் உதவினார். ஏன் கேப்டன் கோலி பதவி ஏற்றபோது கூட தோனி பல்வேறு வகையில் உதவினார். தோனி நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதால் அவர் எப்போது ஓய்வு பெற வேண் டும் என்பது அவருக்கு தெரியும். ஓய்வு பெறுவது அவரது சொந்த முடிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் தனது வாழ்க்கை யில் இந்தியாவுக்காக மிக முக்கிய மான முடிவுகளை எடுத்தவர். நேரம் வரும்போது அவர் ஓய்வு குறித்து அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.