உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலியாக, சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்யப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இரு அணிகளும் 241 ரன்கள் மற்றும் சூப்பர் ஓவரில் சமமான ரன்கள் எடுத்தது. இந்நிலையில் கடைசி நிமிடத்தில் இரு அணிகளின் பவுண்டரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு இங்கிலாந்து அணி வெற்றி என அறிவிக்கப்பட்டது. இந்த முறைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ஐ.சி.சி-க்கு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஐ.சி.சி கூறியதாவது, இனிமேல் சூப்பர் ஓவர் முறையில் சமன் ஏற்பட்டால் பவுண்டரி முறை பயன்படுத்தப்படாது என்றனர். மேலும் போட்டிகளில் தெளிவான முடிவு வரும் வரை சூப்பர் ஓவர் முறையே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.