tamilnadu

img

இந்திய அணியிடம் கவனமாக விளையாடுங்கள்

உலகக்கோப்பை தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.இந்த ஆட்டம் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கல்லிஸ் அளித்த கருத்தில்,”உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கெதிரான ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். இதுதென்ஆப்பிரிக்க அணிக்கு 3-வது ஆட்டமாகும். இந்தியஅணிக்கு  இது முதல் ஆட்டம் என்பதால் அந்த அணியினருக்குப் பதற்றத்தை உருவாகலாம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை ருசிக்கும்என எதிர்பார்க்கிறேன். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்நாம் (தெ.,ஆ) சிறிய தவறு செய்தாலும் இந்திய அணி புரட்டி எடுத்துவிடும் என்பதால் வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்” என எச்சரித்துள்ளார்.