மைதான கண்ணோட்டம் - 1
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை தொடரின்12-வது சீசன் வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.இந்த தொடரில் களமிறங்கும் 10 அணிகள் இங்கிலாந்து நாட்டிற்குசென்று தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.ஏற்கெனவே வீரர்கள் மற்றும் அணிகளின் தன்மை பற்றிய விரிவான கண்ணோட்டம்நிறைவடைந்த நிலையில், இன்று மைதானங்களின் தன்மையைப் பற்றிப் பார்க்கலாம்.
லார்ட்ஸ் (லண்டன்)
லார்ட்ஸ் (லண்டன்)கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் 1814-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும் சர்வதேச பயன்பாட்டிற்கு 1884-ஆம் ஆண்டுதிறக்கப்பட்டது.அதிகபட்சமாக 30,000 பேர் போட்டியை ரசிக்கலாம்.
தன்மை : சுழல், வேகம் இரண்டும் சரிசமாக எடுபடும். ரிவர்ஸ் ஸ்விங் அதிகமாக எழும்பும்.பிட்சின்மையத்தைக் கணிப்பதில் சிரமம் உருவாகும்.ரன் குவிப்பதில் சிக்கல் ஏற்படும்.பவுன்சர் அதிகமாக எகிறாது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடும்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (ஜூன்’23)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா (ஜூன் ‘25)
நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா (ஜூன் ‘29)
பாகிஸ்தான் - வங்கதேசம் (ஜூலை’ 5)
இறுதி ஆட்டம் (ஜூலை ‘14)
கென்னிங்டன் ஓவல் (லண்டன்)
இங்கிலாந்து நாட்டின் பழமையான மைதானங்களில் இதுவும் ஒன்று.1845-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 23,500 பேர் போட்டியை ரசிக்கலாம்.
தன்மை : பேட்டிங், பந்துச்சு என இரண்டும் சரிசமாக எடுபடும் என்றாலும் ரன் குவிப்பிற்கு நன்குஒத்துழைக்கும். பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் நன்றாக பந்துவீசினாலும் 20 ஓவர்களுக்கு பிறகு மைதானம் மந்தமாக மாறும்.பவுன்சர் சீறிய வேகத்தில் எகிறும்.உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் இந்த மைதானத்தில் தான் துவங்குகிறது.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (மே ‘30)
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் (ஜூன் ‘2)
வங்கதேசம் - நியூஸிலாந்து (ஜூன் ‘5)
இந்தியா - ஆஸ்திரேலியா (ஜூன் ‘9)
இலங்கை - ஆஸ்திரேலியா (ஜூன் ‘15)
டிரெண்ட் பிரிட்ஜ் (நாட்டிங்காம்)
1841ல் கட்டப்பட்டது. 17 ஆயிரம் பேர் மட்டுமே போட்டியை ரசிக்கும் வசதி இருந்தாலும் சிறப்பு வசதி அதிகம் உள்ளன. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின்பு மைதானத்தின் தன்மை கணிக்க முடியாத அளவிற்கு அடிக்கடி மாறுபடுகிறது.
தன்மை: கென்னிங்டன் ஓவல் மைதானத்தின்வகையைச் சார்ந்தது.பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும்.பிட்ச் வகையைமாற்றி வீசினாலும் ஷார்ட் பிட்சாகத் தான் எகிறும்.டாஸ் வென்று பேட்டிங் செய்யும் அணிகளை விடசேசிங் அணிகள் எளிதாக வெல்லும்.இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக ரன் மெஷினை பயன்படுத்தலாம்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
விண்டீஸ் - பாகிஸ்தான் (மே ‘31)
இங்கிலாந்து - பாகிஸ்தான் (ஜூன் ‘3)
ஆஸ்திரேலியா - விண்டீஸ் (ஜூன் ‘6)
இந்தியா - நியூஸிலாந்து (ஜூன் ‘13)
ஆஸ்திரேலியா - வங்கதேசம் (ஜூன் ‘20)