tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மகளிர் தினக்   கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தினம்  சனியன்று கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பள்ளி கல்லூரிக ளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐசிசி கமிட்டி  அமைக்க வேண்டும். குழந்தைகள், மாணவிகள், பெண்கள்  மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டம்,  பொன்னேகவுண்டன்புதூரில் சனியன்று திறந்தவெளி கருத் தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட் டப் பொருளாளர் தினேஷ்ராஜா, அன்னூர் ஒன்றியச் செயலா ளர் ரமேஷ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுதா உட்பட  பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சிவானந்தபுரம் பகு தியில் மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உழைப் பால் உயர்ந்து சாதனை படைத்த பெண்கள் கௌரவிக் கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் ஜெ.உஷா, தலைவர் சுமதி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர்  பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் நகரச் செயலா ளர் ஜி.சாந்தாராம் பங்கேற்றார். பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் அமைப்பு மற்றும்  அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க பெண் கள் அமைப்புகள் சார்பில், மகளிர் தின விழா கருத்தரங் கம் கோவை தொலைப்பேசி நிலைய வளாகத்தில் நடைபெற் றது. சுப்புலட்சுமி, சாந்தி பிரேமகுமாரி ஆகியோர் தலைமை  வகித்தனர். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் சங்க மாநிலத்  தலைவர் கு.சசிகலா சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.மகேஸ்வரன், பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்பு செய லாளர் வி.வெங்கட்ராமன், மாவட்டத் தலைவர் ஏ.குடியரசு உட் பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம்

ஒன்றிய அரசின், மாநில விரோதப் போக்கைக் கண்டித்து  கோவையில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிப் பது, நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப் பில் தமிழ்நாட்டை வஞ்சித்து அநீதி இழைப்பது போன்ற மாநில  உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசைக்  கண்டித்து திமுக கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சனி யன்று பொதுகூட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மாநில இளைஞரணி அமைப் பாளர் சபரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாணவரணி  தலைவர் ராஜீவ்காந்தி, திமுக கோவை தெற்கு மாவட்டச் செய லாளர் தளபதி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில் பாதையில் பராம ரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆலப்புழாவிலிருந்து மார்ச் 10, 12, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்ப டும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352)  போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிர்க் கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும். இதேபோல, எர்ணாகுளத்திலிருந்து மார்ச் 10,12, 15 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் எர்ணாகுளம் -  பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) கோவை ரயில் நிலை யம் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப் படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலரின் அதிகாரப் போக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு

கோவை, மார்ச் 9- கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுக்கரை வட்டார கல்வி அலுவலர் அதிகாரப் போக்கில் செயல்படுவதாக கூறி  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட் டது. அந்த மனுவில், “மதுக்கரை வட்டார கல்வி அலுவலர்  கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களுக்கு எதிராக தன்னிச்சை யாக செயல்படுகிறார். இதுகுறித்து மூன்று கட்டமாக காத் திருப்புப் போராட்டம் நடத்தியும் இதுவரை தீர்வு கிடைக்க வில்லை. மதுக்கரை அறிவொளி நகர் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு உபரி யாக உள்ள ஆசிரியரை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர் களை சுழற்சி முறையில் நியமித்துள்ளார். இதற்கான அர சாணை ஏதும் இல்லை. மேலும், மாற்றுப் பணிக்கான ஆணையை நேரில் வழங்காமல் அலைபேசி மூலம் அனுப்பு கிறார். இதற்கு விளக்கம் கேட்டால் நேரில் ஆஜராக சொல் கிறார். இது பழிவாங்கும் நடவடிக்கை. எனவே, மாற்றுப்பணி  மற்றும் விளக்கம் கேட்டு அனுப்பிய ஆணைகளை திரும்பப்  பெற வேண்டும். இல்லையெனில், வட்டார மற்றும் மாவட்ட  கல்வி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்ட தலைவர் ரங்கநாதமூர்த்தி, மாவட்ட செயலாளர்  வீரசாமி மற்றும் மதுக்கரை வட்ட நிர்வாகிகள் ஆகியோர் அளித்தனர்.

சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

உதகை, மார்ச் 9- பாடந்துறை பகுதியில் சுற்றுலா வாகனம் சாலையோரம்  இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் காயமடைந்த னர். நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவர்சோலை பேரூராட்சிக் குட்பட்ட பாடந்துறை பகுதியில் ஞாயிறன்று கேரளம் மாநிலம்,  கண்ணூரிலிருந்து உதகை நோக்கி சுற்றுலா வாகனம் ஒன்று  வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த வாகனம், சாலையோரமிருந்த பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம்  செய்து காயமடைந்த 17 பேர், கூடலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.