ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி
உடுமலை, மார்ச் 9- திருப்பூர் வனக்கோட்டத்திற் குட்பட்ட 20 குளங்களில், ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பா னது, ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிறன்று நடைபெற்றது. ஆனை மலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட என்.மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம் உட்பட 20 குளங்களில் இந்த பறவை கள் கணக்கெடுப்பு பணி நடைபெற் றது. திருப்பூர் வனக்கோட்டத்தின் துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா வழிகாட்டுதலின் படி, வனத்துறை பணியாளர்களும், தன் னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் பங்கேற்றனர். முன்ன தாக, சனியன்று பறவைகள் கணக் கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி வகுப்பு மற்றும் கணக் கெடுப்பிற்கு தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட் டது. நீர்நிலைகளில் உள்ள பறவை கள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பில் கணக்கிடப்பட் டது. இதில் புள்ளி மூக்கு வாத்து, சின்ன கீழ்க்கைச் சிறகி, சங்கு வளை நாரை, சென்நீல நாரை, கரண்டி வாயன், கருப்பு அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, தாமரை கோழி, சின்ன பட்டாணி உப்பு கொத்தி, சின்ன கொசு உள்ளான், பொறி மண் கொத்தி, வெண் மார்பு மீன்கொத்தி, மயில், பனை உழவாரன், காட்டுத் தகைவிலான் போன்ற பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.