விவசாயத் தொழிலாளர்களுக்கு மனை பட்டா வழங்க விதொச வலியுறுத்தல்
தருமபுரி, ஜன. 4- வீடில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத்தொழி லாளர் சங்கத்தின் ஏரியூர் ஒன்றியப்பேரவை வலியுறுத்தியுள் ளது. அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஏரியூர் ஒன்றியப் பேரவை கூட்டம் நெருப்பூரில் நடைபெற்றது. நிர்வாகி அசோகன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து, மாவட்ட தலைவர் என்.பி. முருகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்ட பொருளாளர் எம். தங்கராசு நிர்வாகி ரவி, ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் வாழ்த்திப் பேசினார். இதில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். வீடுல்லாத மக்க ளுக்கு வீட்டு மனை பட்டா, பல்வேறு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகாலமாக வீடுகட்டிகுடியிருக்கும் ஏழைமக்க ளுக்கு நிபந்தனையின்றி மனைப்பட்டா வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து விவசாயத் தொழிலா ளர்களுக்கும் ரூபாய் 3000/- பென்ஷன் வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தில் 15 பேர் கொண்ட ஒன்றியக் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளராக ஏ.அசோகன் தேர்வு செய்யப்பட்டார்.
