சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒன்றிய - மாநில அரசுகள் தனிச் சட்டமியற்ற வேண்டும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு தீர்மானம்
மயிலாடுதுறை, செப். 1 - சாதி ஆணவக் கொலைகளுக்கு எதி ரான சிறப்புச் சட்டத்தை ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நிறைவேற்றிட வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாடு, மயிலாடுதுறையில் ஞாயி றனன்று துவங்கியது. திங்களன்று இரண்டாவது நாள் மாநாட்டில், ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மு.வீரபாண்டியன், ஆதித் தமிழர் கட்சி யின் தலைவர் கு. ஜக்கையன் ஆகி யோர் வாழ்த்துரை ஆற்றினர். “அம்பேத்கரை அறிந்து கொள் வோம்” என்கிற நூலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் வெளி யிட இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லத் தலைவர் மிருதுளா பெற்றுக் கொண்டார். “நவீன தலித் சிறுகதை கள்” நூலை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ். வாலண்டினா வெளியிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக, முறையாக அம லாக்கப்பட வேண்டும், சாதி ஆண வக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நிறைவேற்றிட வேண்டும், மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவுக்கு முடிவு கட்டும் வகையில் அத்தொழிலை முழுமையாக இயந்திர மயமாக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும், துப்புரவு பொறியியலை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்க வலியுறுத்தியும், சாதி வாரிக் கணக்கெடுப்பை முழுமையான சமூகப் பொருளாதார ஆய்வுகளை உள்ளடக்கியதாக, காலதாமதமின்றி விரைவில் நடத்தி முடித்து, பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் வாழ்நிலை இடைவெளிகளை நிரப்பிட வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமலாக்கம் வேண்டும்; பொதுத்துறை தனியார்மயத்தை கை விட வலியுறுத்தியும், பள்ளிகளில் நிகழும் சாதியப் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணை யத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலப் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினார்.
மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாநில சிறப்பு தலைவராக எஸ்.கே. மகேந்திரன், தலைவராக த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளராக பி.சுகந்தி, பொருளாளராக கே. முருகன், துணைப் பொதுச்செயலாளர்களாக க. சுவாமிநாதன், இ. மோகனா, பி.பி. பழனிச்சாமி, பழ. வாஞ்சிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 18 பேர் துணைச் செயலாளர்களாகவும், கே. சாமுவேல் ராஜ் உட்பட 18 பேர் துணைத் தலைவர்களாகவும், இவர்களை உள்ளடக்கிய 137 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் சி. மேகநாதன் நன்றி கூறினார்.