பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்பு
கோவை, ஏப். 8 – கோவை துடியலூர் பகுதியில் செவ்வாயன்று பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் இனிப்புக் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் துடியலூர், விசுவநாதபுரம் பகுதி யில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பேக்கரி மற்றும் இனிப் புக் கடை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் செவ் வாயன்று கடைக்கு வராததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ள னர். வீடு பூட்டிய நிலையில் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத் தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையி லும் சடலமாகக் காணப்பட்டனர். உடனடியாக, ஊழியர்கள் துடியலூர் காவல் துறை யினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் சிந்து தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட விசாரணையில், மகேஷை கொலை செய்து விட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்ப வம் துடியலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னரே மேலும் விவரங்கள் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நியாய விலைக் கடைக்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலை கடை ஊழியர்கள் கருப்பு நிற உடை அணிந்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
இணைப்பு இருந்தும் குடிநீருக்காக ஏங்கும் மக்கள்
ஈரோடு மாவட்டம், பிச்சாண்டாம்பாளை யம் சாலப்பாளையம்மேடு பகுதி மக்க ளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங் கப்பட்டும், குடிநீர் சரிவர விநியோகம் செய் யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு காவிரி ஆற்று குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரி ஆற்று நீருக்கு பதிலாக ஆழ்துளை கிணற்று நீரே வழங்கப்படுகிறது. மேலும், இப்பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த் தொட்டி மட்டுமே உள்ளதால், அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. காவிரி ஆற்று நீர் வழங்குவதாக கூறி குடி நீர் இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படு கிறது. ஆனால், சொன்னபடி காவிரி நீரை வழங்காமல், தொடர்ந்து கட்டணம் வசூலிப் பது வேதனையளிக்கிறது. எனவே, இப்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், காவிரி ஆற்று குடிநீரை முறையாக வழங்கிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள் கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப்
கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் அமைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பேரூரைச் சேர்ந்த சசி என்பவர், டெலிவரி சேவையில் பணியாற்றி வருகிறார். நாள் தோறும் வெயிலும் மழையிலும் இயங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், தனது வாகனத்தில் வெயில் மற்றும் மழையி லிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சன் ரூஃப் அமைத்துள்ளார். “கடுமையான வெயிலில் குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் காணும் போது, பாது காப்பாக இருக்க வழி தேடினேன். ஆன்லை னில் வாங்கிய சன் ரூஃஃப்பை என் வாகனத் தில் பொருத்தி பயணிக்கிறேன். இது வெயி லும், மழையிலும் பாதுகாக்கிறது. மேலும் டெலிவரி நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது,” என சசி கூறினார். வழக்கமான இருசக்கர வாகனங்களில் சன் ரூஃப் காணப்படாத நிலையில், சசி யின் வாகனம் கோவை தெருக்களில் சுழன் றாடும்போது மக்கள் ஆச்சரியத்துடன் கவ னிக்கின்றனர். அவரின் இந்த புதுமையான முயற்சி, வெயிலும் மழையும் தவிர்க்கும் உத்தியாக பலருக்கும் உதவியாக இருக் கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.