tamilnadu

img

பழங்குடி மக்கள் சங்க மாவட்டப் பேரவை

பழங்குடி மக்கள் சங்க மாவட்டப் பேரவை

உதகை, நவ.10- பழங்குடி மக்கள் சங்க  நீலகிரி மாவட்டப் பேரவை  கூட்டத்தில், பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட் டன. தமிழ்நாடு பழங்குடி மக் கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டப் பேரவை கூட்டம்,  கூடலூர் ஜானகி அம்மாள்  திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. சங்கத் தின் மாவட்ட அமைப்பாளர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்டச் செய லாளர் பி.போஜராஜ், ஒன்றியச் செயலாளர்  முகமதுகனி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். பழங்குடி மக்கள் நல செயற்பாட்டாளர் மோகன்குமார் சிறப்புரையாற்றினார். மூத்த  வழக்கறிஞர் பா.ப.மோகன் கருத்துரை யாற்றினார். இக்கூட்டத்தில், முதுமலை புலிகள் காப்ப கத்திலிருந்து சட்டங்களுக்கு புறம்பாக காட்டு நாயக்கன், பணியன் பழங்குடி மக்களை வெளியேற்றிய அரசு அலுவலர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி யேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு வழங்கிய இழப்பீட்டு தொகையில் மோசடி செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வன கிராம சபை கள் அமைக்க வேண்டும். 1950 ஆண்டு  முதல் பழங்குடியினரிடமிருந்து பறிக்கப்பட்ட  நிலங்களை மீட்டெடுத்து, நிலமற்ற பழங்குடி களுக்கு 5 ஏக்கர் வீதம் நிலம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.