tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தருமபுரி, ஏப்.20- விடுமுறை தினமான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் வரும் ஏராளமான சுற்று லாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வது வழக்கம். இந்நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப் புப் பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சனியன்று ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்த நிலையில், ஞாயி றன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்நிலையில், விடுமுறை தின மான ஞாயிறன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா  உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணி கள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். இதன்பின் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை ரசித்து மகிழ்ந்தனர். ஒகே னக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தா லும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

லாரி மோதி விபத்து: விசைத்தறித்  தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல், ஏப்.20- திருச்செங்கோடு அருகே லாரி மோதியதில், விசைத்த றித் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி, அக்கம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (42). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார். இதேபோல், திருச் செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மகேந்திரன் (36) என்பவருக்கு, சுதா என்ற  மனைவியும், சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர். விசைத்தறித் தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் சனியன்று, அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளியமரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக சேலம் மாவட்டம், ஆத் தூர், கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரியை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதியது. இவ்விபத்தில்  சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். மகேந்திரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியி லேயே மகேந்திரனும் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

இலவச மின் இணைப்பு திட்டம்: காலதாமதம் செய்வதாக விவசாயிகள் வேதனை

உடுமலை, ஏப்.20-  தமிழ்நாடு அரசின் ஒரு லட்சம் விவ சாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு  வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயி களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இதுவரை பதிவு செய்த பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழு வதும் பல வருடங்கள் மின் இணைப்பு கேட்டு  விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் இருந்தது. மேலும், பல லட்சம் பணம் கட்டி மின் இணைப்புகளை பெற்று வந்த நிலையில், தட்கல் திட்டம் வசதி படைத்த விவசாயி களுக்கு மட்டுமே பயன்பட்டது. இதைய டுத்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், ஆட்சி மாற் றம் ஏற்பட்டவுடன், பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியா னது. அதன் பின் மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உடுமலை, தளி, பூலாங்கிணறு, கொழுமம், மடத்துக்குளம் உள்ள மின்வா ரிய அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பட்டது. பின்னர் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் கூடு தல் மின் கம்பங்கள் விவசாய நிலத்தில் நடப்பட்டது. இருப்பினும் பல விவசாயிக ளுக்கு மின் இணைப்புகள் வழங்கபட வில்லை. இலவச மின் இணைப்பு கிடைக் கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பம் முதல் மின் கம்பம் நடும் வரை அனைத்து அதிகாரி களும் பணம் கொடுத்தும், இதுவரை மின்  இணைப்பு வழங்க படவில்லை. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் அரசு உத்தரவு வரவில்லை என்று பதில் கூறுகின்றனர். எனவே உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் ரூ.2.49 கோடி வரி வசூல்

சேலம், ஏப்.20- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும், ஒரே நாளில் மட்டும் ரூ.2.49 கோடி வரி வசூலாகியது. தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டத்தின்படி, சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை வரும் ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தும் போது 5 சதவிகித ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெறத் தகுதியுடை யவர்கள் ஆவர். அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிப் பகுதியிலுள்ள சொத்து உரி மையாளர்கள் தங்களது சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள வரிவசூல் மையங்க ளில் கடன் அட்டை, பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் கடந்த ஏப்.17 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.2.49 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. சூரமங்க லம் மண்டலத்தில் ரூ.53.89 லட்சம், அஸ்தம் பட்டி மண்டலத்தில் ரூ.55.33 லட்சம், அம்மாப் பேட்டை மண்டலத்தில் ரூ.25.83 லட்சம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ.43.10 லட்சம், வரியில்லாத இனங்கள் மூலம் ரூ.72 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணை நிலவரம் பவானிசாகர் அணை நீர்மட்டம்:73.81/105அடி நீர்வரத்து:166கனஅடி நீர்திறப்பு:2250கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:43.30/72அடி நீர்வரத்து:35கனஅடி நீர்திறப்பு:1060கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி ஆழியார் அணை  நீர்மட்டம்:64.60/120அடி நீர்வரத்து:239கனஅடி நீர்திறப்பு:160கனஅடி

குடிநீர் வால்வு பழுது: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர், ஏப்.20- திருப்பூரில் ராட்சத குடிநீர் குழாய் வால்வு பழுதாகி மாதக்கணக்கில் தினமும் பல்லா யிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதை மாநக ராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 31 ஆவது வார்டு உட்பட்ட ஓம் சக்தி கோவில் அருகில் ராட்சத குடிநீர் குழாய் செல்கிறது, இந்த குடிநீர் குழாயின் மேல் பகுதியில் பல்வேறு பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் வால்வு பொருத்தப்பட்டுள்ளது. இது குடிநீர் ஓட்டத்தை திறப்பதற்கும், மூடு வதற்கும், மற்றும் ஓட்ட விகிதத்தை கட் டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் வால்வு பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால், தினந் தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் லட்சுமி நகர், பிரிட்ஜ் வே காலனி, முத்துநகர் , எஸ்.வி.காலனி, கொங்கு மெயின் ரோடு உள் ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 7 நாட்க ளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய் யப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிக்கையை மட் டும் வெளியிடுகிறார். நாள்தோறும் வீணாக சாக்கடையில் கலக்கும் இந்த குடிநீர் வால்வை சரி செய்து இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.