திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் குடிநீர் வசதி கோரி காத்திருப்பு போராட்டம்
ருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதி கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர் விடுதியில் குடி நீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து தரக் கோரி கடந்த பிப்ர வரி 28 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந் தித்து மனு அளிக்கப்பட்டது. இருப்பி னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வியாழனன்று இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கல்கிராஜ் தலைமையில், மாணவர்கள் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் தேவ ராஜ் மாணவர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், வரும் செவ்வாய்க்கிழமை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், செவ்வாயன்று, சுத்திகரிக் கப்பட்ட தண்ணீர் ஏற்பாடு செய்யாவிட் டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டம் நடத்தப்படும் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சா.பிரவீன் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ர.ஷாலினி, நிர் வாகிகள் மணிகண்டன், சபரிநாதன், பொன்னமால் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.