tamilnadu

img

உழைப்பவர் உரிமைக்கான போராட்டத்தில் சமரசம் கிடையாது!

உழைப்பவர் உரிமைக்கான போராட்டத்தில் சமரசம் கிடையாது!

மே தினத்தில் சூளுரை தருமபுரி, மே 1- கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக காவடி தூக் கும் ஆட்சியாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர் பாதுகாப்பு நலச்சட்டங்களை 4 ஆக சுருக்குவதும், தொழிற்சங்கமே அமைக் கக்கூடாது என்கிற தொழிலாளர் விரோத நடவ டிக்கைகளை மேற்கொள்ளும் ஆட்சியாளர்க ளுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசமு மின்றி செங்கொடி இயக்கம் போராடும் என்கிற சூளுரையோடு மேதின விழா எழுச்சியோடு நடைபெற்றது. உழைப்பாளர் தினம் வியாழனன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடி யேற்று விழா கட்சி கிளைகள் தோறும் நடைபெற் றது. அதன்படி, தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற நிகழ்விற்கு, ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன் செங்கொடியை ஏற்றி  வைத்தார். இதேபோன்று, மொரப்பூரில் ஒன்றி யச் செயலாளர் கே.தங்கராஜ், பாப்பிரெட்டிப் பட்டியில் வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், தருமபுரியில் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி, நல்லம்பள்ளியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், இண்டூரில் பகுதிச் செயலாளர் சேகர், பென்னாகரம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவா னந்தம், நகரத்தில் நகரச் செயலாளர் செல்வம், கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல், ஏரியூரில் ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், பாப்பாரப்பட்டியில் பகுதிச் செய லாளர் ஆர்.சக்திவேல், பாலக்கோட்டில் வட்டச் செயலாளர் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் தலைமை யில் மே தின கொடியேற்று விழா நடைபெற் றது. இந்நிகழ்வுகளில் கட்சியின் மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு, இடைக்கமிட்டி உறுப்பினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தருமபுரி பெரியார் சிலை முன் பிருந்து சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தின பேரணி துவங்கியது. ஏஐடியுசி மாநிலச் செய லாளர் ஆர்.ஆறுமுகம் துவக்கி வைத்தார். முக் கிய வீதிகள் வழியாக சென்று, தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு பேரணி நிறைவடைந் தது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் சி.நாகரா சன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பி.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.சண்முகம் வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, ஏஐ டியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, பொரு ளாளர் ஏ.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற் றினார். இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் சிபிஎம் நாமக்கல் மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிக்கு, கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பெரிய சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர். இதே போன்று, நாமக்கல் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், விஜயலட்சுமி தியேட்டர், ஏலூர், பட்டணம், தொட்டியபட்டி, அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை, கவுண்டம்பாளையம் மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிக ளில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு களில், ராசிபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பெரியசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவுடையநம்பி, நகரச் செயலாளர் சி.சண் முகம், ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.சதாசிவம், செயலாளர் சி.பழனிவேல், பொருளாளர் கே.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் குமாரபாளையம் நகரக்குழு சார்பில், இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலா ளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோட்டில் சூரியம்பாளையம் கட்சி  அலுவலகம், காவேரி நினைவகம், சுமைப்பணி தொழிலாளர்கள் அலுவலகம் ஆகிய பகுதி களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றி யச் செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ராசிபுரம், ஆயில்பட்டி, பள்ளி பாளையம் நகர அலுவலகம், காவேரி ஆர்.எஸ்.  தொழிற்சங்க அலுவலகம் மற்றும் ஒன்றியப் பகுதி யின் பல்வேறு இடங்களில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் லட்சு மணன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம், மாரப்பன் பாளையம், செக்காரப்பட்டி, கட்டிப்பாளையம் ஆகிய பகுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங் கேற்றனர். இதேபோன்று, கொல்லிமலை, பர மத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சேலம் சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலக மான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில், 139 ஆவது உழைப்பாளர் தினக் கொண்டாட்டம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் தலைமை வகித்தார். தொழிலாளர்களின் விடுத லைக்கு வித்திட்ட உலக மாமேதை காரல்  மார்க்ஸ் சிலைக்கு, கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப் பாளருமான செ.முத்துக்கண்ணன் மாலை அணி வித்து உரையாற்றினார். சேலம் ரயில்வே கூட் செட் பணிமனையில் மே தின நிகழ்ச்சி நடை பெற்றது. சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி னார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், சுமைப்பணி தொழிலாளர் சங்க  நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதே பேன்று, சேலம் மாநகர பகுதிகளிலுள்ள டாக்ஸி, ஆட்டோ நிறுத்தங்கள், போக்குவரத்து பணி மனைகள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர்கள் தின கொண்டாடப்பட்டது. கோவை சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற மே தின விழாவில், மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நட ராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். நஞ் சேகவுண்டன் புதூர் கிளை சார்பில், மறைந்த தோழர் ஆர்.நாகராஜன் படத்திறப்பு மற்றும் மே தின விழாவில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றியச் செயலாளர் எம்.சண்முகசுந்த ரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர். ரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற விழாவில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா பங்கேற்று உரையாற்றினார். எஸ்.எஸ்.குளம் கிழக்கு, ஆர்.ஜி.புதூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் வெள்ளியங்கிரி உட்பட பலர் கலந்து கொண் டனர். சிங்காநல்லூர் நகரக்குழுவின் சார்பில்  நடைபெற்ற நிகழ்விற்கு, நகரக்குழு உறுப்பினர் பிஜு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று கோவை மாவட்டத்திற்கு உட் பட்ட கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு, பீள மேடு, மதுக்கரை ஒன்றியம், பொள்ளாச்சி, வால் பாறை, ஆனைமலை, அன்னூர், மேட்டுப்பாளை யம், பெரியநாக்கன்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மேதின கொடியேற்ற நிகழ்வுகளில் இடைக்குழு செய லாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர். கோவை மாநகர் பகுதிகளில் 125 இடங் களில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற விழா வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பங் கேற்று கொடியேற்றினார். இந்நிகழ்வில் சிஐ டியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் சார்பில் நடை பெற்ற விழாவில் பொதுச்செயலாளர் பி.சந்தி ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருகூர் கூட் செட் பகுதியில், கிளைத் தலைவர் ரமேஷ் தலை மையில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற மேதின கொடியேற்று விழாவில் சங்கத் தின் பொதுச்செயலாளர் ஜான் அந்தோணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதே போன்று சிஐடியு இணைக்கப்பட்ட சங்கங்க ளான ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், இன்ஜினிய ரிங் சங்கம், பஞ்சாலை தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர்  உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் நூற்றுக்கணக் கான மையங்களில் எழுச்சிகரமான மேதின கொடியேற்றம் நடைபெற்றது. இதேபோன்று சிஐடியு, ஏஐடியுசி இணைந்து நடைபெற்ற மேதின பேரணி, வடகோவை சிந்தாமணி முன்புறம் துவங்கி தெப்பக்குளம் மைதானத்தில் நிறைவடைந்து. இங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், சிபிஐ மாநிலப்  பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், சிஐடியு மாவட்டச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி, ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈரோடு சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி  தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.துரை ராஜ் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெருந்துறை கட்சி  அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழா விற்கு தாலுகாச் செயலாளர் ஆர்.அர்ச்சுனன் தலைமை வகித்தார். இதில் திரளானோர் பங் கேற்றனர். இதேபோன்று காஞ்சிகோயில், பெருந் துறை அரசு போக்குவரத்து கழக பணிமனை, திருவேங்கடம்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் சிஐ டியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில்  நடைபெற்ற கொடியேற்று விழாவில், சங்கத்தின் மூத்த உறுப்பினர் கிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோபிச்செட்டிபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, கிளைத் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல துணைத்தலைவர் துரை ராஜ், ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் எம்.கே.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அந்தியூர் கட்சி அலுவலகத்தில், தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.கீதா தலைமையில் நடை பெற்ற நிகழ்வில், தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதே போல் தாலுகாவில் 10 இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதேபோன்று, ஈரோடு சிபிஎம் நகரக்குழு  அலுவலகம், கமலா நகர் கிளை உள்ளிட்ட  பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. நகரச் செயலாளர் வி.பாண்டியன், இடைக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு தாலுகா, ஊனாத்திபுதூர், மூலப்பாளையம், பெட்ரோல் பங்க், டெம்போ ஸ்டேன்ட் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு, டாஸ்மாக் ஊழியர் சங்கம், பீடி, சுருட்டு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங் கள் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. இதேபோன்று நம்பியூர், மூணாம்பள்ளி, காரப் பாடி கொளப்பலூர், தாழ்குனி என 7 இடங்க ளில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி, கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பவானி தாலுகா கமிட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 18 இடங்களில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாலுகாச் செயலாளர் ஆர்.பிரகாஷ் மற் றும் வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சிஐடியு மற்றும் மற்றும் ஏஐடியுசி இணைந்து மே தின விழா  பேரணி, பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற் றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணிக்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். இப்பேரணி சத்தி ரோடு வழியாக வீரப்பன் சத்திரத்தில் நிறைவடைந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. சண்முகவள்ளி, நியூ செஞ்சுரி புத்தக நிறு வனத்தின் நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன், ஏஐ டியுசி மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை காப்பிஸ் பகுதி யில் இருந்து சிபிஎம், சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் மே தின பேரணி துவங்கியது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, மத்திய பேருந்து நிலையம் முன்பு பேரணி நிறை வடைந்தது. இதன்பின் நடைபெற்ற பொதுக்கூட் டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கர லிங்கம், ஏஐடியுசி நிர்வாகி தங்கதுரை ஆகி யோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநிலத் தலைவர் தினேஷ் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், போக்குவரத்து சங்க செயலாளர் பி.கணேசன், ஏஐடியுசி துணை பொதுச்செயலாளர் நசீர், நகராட்சி ஊழியர் சங்க செயலாளர் த.பழனிச் சாமி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார். தீக்கதிர் கோவை தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப் பின் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகக்குழு சார்பில் கனேசபுரத்தில் மே தின விழா நடை பெற்றது. ஆசிரியர் குழு செயலாளர் ஜீவா தலைமையேற்றார். கோவை பதிப்பின் பொறுப் பாசிரியர் எம்.கண்ணன் மேதின கொடியேற்றி உரையாற்றினார். இதில், தீக்கதிர் கோவை பதிப்பின் பொதுமேலாளர் எஸ்.ஏ.மணிக்கம், செய்தி ஆசிரியர் ஏ.ஆர்.பாபு, நிர்வாகக்கிளைச் செயலாளர் ஏ.நெல்சன்பாபு உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி  மற்றும் சிஐடியு சார்பில், 300க்கும் மேற்பட்ட  இடங்களில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானாவிலிருந்து சிஐடியு, ஏஐடியுசி சார் பில் துவங்கிய மே தினப் பேரணி, அரிசிக் கடை வீதியில் நிறைவடைந்தது. சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், ஏஐ டியுசி சார்பில் கே.சுப்பராயன் எம்.பி., பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.