புதிய நூலக கட்டிடம் திறப்பு
நாமக்கல், பிப்.26- புதுப்பட்டி பேரூர் பகுதி யில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.பி., திறந்து வைத் தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகி ரிப்பேட்டை ஒன்றியத்துக் குட்பட்ட புதுப்பட்டி பேரூ ராட்சி பகுதியில் மாநிலங் களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிளை நூலக கட்டிடம் கட் டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்நிகழ் வில், மாநிலங்களவை உறுப் பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் கலந்து கொண்டு புதிய கிளை நூலக கட்டி டத்தை மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, பேரூ ராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆவின் வளாகத்தில் புதிய தொழிற்சாலை திறப்பு
உதகை, பிப்.26- உதகையில் உள்ள ஆவின் வளாகத்தில் ஒரு மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட புதிய பாலாடைக்கட்டி (சீஸ்) தொழிற்சா லையை முதல்வர் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தின் பால் உற்பத்தியா ளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், உதகையில் உள்ள ஆவின் வளாகத்தில் 14.40 கோடி மதிப்பீட்டில் ஒரு மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட புதிய பாலாடைக்கட்டி (சீஸ்) தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதனை வியாழனன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
80 ஆயிரம் சதுர அடியில் பட்டுக்கூடு வர்த்தக மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: அதிகாரிகள் தகவல்
தருமபுரி, பிப்.26- ரூ.19.20 கோடி மதிப்பீட்டில், 80 ஆயி ரம் சதுர அடி பரப்பளவில் தருமபுரி யில் அமைக்கப்பட்டு வரும் பட்டுக்கூடு வர்த்தக மையம், விரைவில் பயன் பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரி வித்தனர். தமிழக பட்டு வளர்ச்சித்துறை சார் பில், தருமபுரியில் வெண்பட்டுக்கூடு வர்த்தக மையம் (அங்காடி) பால் பண்ணை அருகே நான்கு சாலைப் பகுதி யில் செயல்பட்டு வருகிறது. வெண் பட்டுக்கூடுகளுக்கென பிரத்யேகமாக அமைந்துள்ள இந்த வர்த்தக மையத் திற்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வந்து, வர்த்தகத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தற்போது செயல் பட்டு வரும் வர்த்தக மையத்தில் போதிய இடவசதி இல்லை. மேலும், நாளுக்கு நாள் இங்கு வரும் விவசாயி களின் எண்ணிக்கையும், பட்டுக்கூடு விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பட்டுக்கூடு அங்காடியை மேம்படுத்த பட்டு வளர்ச்சித்துறை முடிவு செய்தது. அதனடிப்படையில், தருமபுரி - பென்னாகரம் சாலையில், வாரியார் பள்ளி எதிரே சுமார் 80 ஆயி ரம் சதுர அடி பரப்பளவில் பட்டுக்கூடு வர்த்தக மைய கட்டடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. ரூ.19.20 கோடியில் அமைக்கப் படும் இந்த வர்த்தக மையத்தின் கட்டு மானப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படு கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், மாநிலத்திலேயே வெண்பட்டுக் கூடுகள் அதிகளவில் விற்பனையாகும் சிறப்பான இடத்தை தருமபுரி பெற்றுள் ளது. இங்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் விவசாயிகள் ரூ.34 கோடி மதிப்பில் பட் டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனர். சிறப்பு மிக்க தருமபுரி மாவட்ட பட்டுக் கூடு வர்த்தக மையத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.19.20 கோடியில் பணிகள் நடை பெற்று வருகின்றன. 80 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மட்டும் அமைகி றது. எத்தனை விவசாயிகள் வந்தாலும் அங்கு தங்கியிருந்து தங்களது பட்டுக் கூடுகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் வசதிகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகின்றன. தங்குமிடம், ஓய்வறைகள், கழிவறைகள், பட்டுக் கூடுகளை இருப்பு வைக்கும் இடம், மேடைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 50 சத வீத பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து வர்த்தக மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும், என்றனர்.