tamilnadu

அரசு போக்குவரத்துக் கழகத்தில் சாதிய ரீதியாக தீண்டாமை ஏற்படுத்தியவர் தற்காலிக பணி நீக்கம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் சாதிய ரீதியாக தீண்டாமை ஏற்படுத்தியவர் தற்காலிக பணி நீக்கம்

மேட்டுப்பாளையம், ஜன.31- மேட்டுப்பாளையத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை 1 பிரி வில் பணியாற்றிய மேலாளருக்கு சாதிய ரீதியாக தீண்டாமை ஏற்படுத்தி யவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை 1 பிரிவில் ஓட்டுநர் சசிராஜ் என்பவர் பணியாற்றுகிறார். இவர் இந்த கிளையில் திமுக எல்பிஎப் தொழிற்சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனது தொழிற் சங்க செல்வாக்கை பயன்படுத்தி பட் டியலினத்தை சேர்ந்த நடத்துநர் மற் றும் ஓட்டுநர்களுக்கு தொலைதூரப் பேருந்து பணியும், அவர் சாதி பணி யாளர்களுக்கு இலகுவான ரூட் கொண்ட பேருந்துகளும் ஒதுக்கி வந் துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொழிலாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விடுமுறை வழங்குவது, பணியை ஒதுக்குவதும் வாடிக்கை யாக வைத்துள்ளார். இவருக்கு ஆளுங்கட்சி அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், இங்கு கிளை மேலாளராக உள்ளவர் கள் இவரது பேச்சை கேட்கவில்லை  என்றால், உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கிளை ஒன்றில் மேலாளராக தாழ்த்தப்பட்ட சமுதா யத்தை சேர்ந்தவர் புதிய மேலாளராக பிரகாஷ் குமார் வந்துள்ளார். அவரி டம் சசிராஜ் சாதிய அடிப்படையில் நடந்து கொண்டதுடன் தகாத செயல் களை செய்ததால் அவரது அடாவடித் தனத்திற்கு, மெமோ வழங்கியுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த சசி ராஜ் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தி பிரகாஷ் குமாரை உக்கடம் கிளைக்கு மாற்றியுள்ளார். இடமாற் றம் ஆணை வந்ததும், மேலாளர் அறைக்கு சென்று, அவர் பட்டியலி னத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘பீடை ஒழிந்தது’ எனக்கூறி பணியாளரை வைத்து அவரது அறையை சுத்தம் செய்து, மாட்டுச் சாணம் வைத்து  சாணி மொழுகிஅவரை அசிங்கப்ப டுத்தி உள்ளார். இந்த விஷயம் மேலா ளருக்கு தெரியவே வேதனைய டைந்து அங்கிருந்து சென்றவர், இது வரை பணிக்கு திரும்பவில்லை என  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம டைந்த தொழிலாளர்கள் சசிராஜின்  சாதிய ரீதியிலான நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சசிராஜ் தற்போது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.