தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இலவச பயிற்சி வகுப்பில் படித்த மாணவர்கள் வெற்றி
தேசிய உதவித்தொகைக்கான தேர்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப் பில் படித்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ள னர். தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை தேர்வு – 2025க்கான பயிற்சி வகுப்புகளை, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் உடுமலைப்பேட்டை கிளை சார்பில், உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் வார விடுமுறை நாட்க ளில் இலவசமாக நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் உடுமலை அருகே உள்ள 14 பள்ளி களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிப்.22 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வில் முடிவுகள், சனியன்று வெளியாகின. அதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய வகுப்புகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் எட்டு பேர் தேர்ச்சி பெற்று, படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற் றுள்ளனர். கிழுவங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த பி. ஸ்ரீதாரணி, ஆர்.சாருஹாசினி, எஸ்.சபரீஸ்வ ரன் ஆகிய மூன்று மாணவர்களும், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.சர்வஜித், உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் ஆர்.ரிஷி, எம்.டல்சர், குறிச்சிக் கோட்டை ஆர்.விஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்.சுதீர், எஸ்.கீர்த்தி ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற 63 மாணவர்களில், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பி.ஸ்ரீ.தாரணி, 3 ஆவது இடத்தை எஸ்.சர்வஜித் ஆகியோர் பிடித்துள் ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனை வரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க உடு மலைப்பேட்டை கிளையின் சார்பில் செல் லத்துரை, ஈஸ்வரசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.